மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 707 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 14 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சென்னை, சேலம், அரியலூர், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 230 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரிரு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு பொது சுகாதாரத்துறையினர் தினமும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதும் முக்கிய காரணமாகும். மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரத்தும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story