மதனகோபால சுவாமி கோவிலில் உறியடி உற்சவம்


மதனகோபால சுவாமி கோவிலில் உறியடி உற்சவம்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:55 PM GMT (Updated: 2021-09-01T02:25:03+05:30)

மதனகோபால சுவாமி கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று முன்தினம் முதல் 2 நாட்கள் நடந்தது. இதில் நிறைவு நாளான நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாளை, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதி முன்பு எடுத்து வரப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள நான்கு கால் மண்டபத்தில் உறியடி உற்சவம் நடைபெற்றது. மேலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. சுவாமி வீதி உலா மற்றும் தேரோடும் வீதிகளில் நடைபெற இருந்த உறியடி திருவிழா நடைபெறவில்லை.

Next Story