கீரனூர் அருகே ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
கீரனூர் அருகே ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகைகள்-பணம் கொள்ளை போனது.
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஜெய்ஹிந்த் நகரில் வசிப்பவா் விஜய் (வயது 46). இவர், லெட்சுமணன்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்திற்கு மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தார்.
அங்கிருந்து நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 41 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. முன்பகுதி கேட்டை உடைக்காமல் சுவர் ஏறி குதித்து பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தரிய வந்தது.
மோட்டார் சைக்கிள் திருட்டு
கொள்ளையடித்து விட்டு வெளியே வந்த மர்ம நபர்கள் அருகில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் ராமு என்பவரின் வீட்டு கேட்டை உடைத்து உள்ளே நிறுத்தப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் கீரனூர் போலீசார் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த துணிகர சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story