சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது 3 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தந்தை, அந்த முதியவரை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்தனர். அவர் தனது உடலில் காயம் இருப்பதாக கூறியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் அந்த சிறுமியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story