மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thuggery law was passed on youth

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு உடையார் பட்டியைச் சேர்ந்தவர் நெல்லையப்பன் மகன் இசக்கி சுப்பையா தாஸ் (வயது 23). இவர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் ஆகிய வழக்குகளில் நெல்லை சந்திப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சுரேஷ்குமார், டவுன் உதவி போலீஸ் கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) விஜயகுமார் ஆகியோர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணனுக்கு பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று, இசக்கி சுப்பையா தாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இசக்கி சுப்பையா தாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2. கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3. 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5. கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.