போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2021 3:08 AM IST (Updated: 1 Sept 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

புளியங்குடி:
தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை கண்டித்து நேற்று அதிகாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணைத்தலைவர் ஷார்ப் கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பூவையா, வசந்தம் சுப்பையா, சி.ஐ.டி.யு. அமல்ராஜ், ஏ.ஐ.டி.யூ.சி மணிவண்ணன், ஐ.என்.டி.யூ.சி அய்யப்பன், ஸ்டாப் யூனியன் ராஜாஜி மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story