கரும்பு தோட்டத்தில் தீ
கரும்பு தோட்டத்தில் தீ
முத்தூர்:
நத்தக்காடையூர் அருகே உள்ள சாலைத்தோட்டம் புதூரை சேர்ந்தவர் கண்ணப்பன் என்ற சதாசிவம்.(வயது 51). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 5 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து உள்ளார். இதில் 3 ஏக்கர் கரும்பு வெட்டப்பட்டு உள்ளது. மீதம் 2 ஏக்கர் கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் இவரது தோட்டத்தில் கரும்பு பயிரின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது வீசிய பலத்த காற்றின் வேகத்தினால் தீ கரும்பு பயிர் முழுவதும் வேகமாக பரவி எரிய தொடங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சி.தனசேகரன், வேலுச்சாமி (போக்குவரத்து) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் 1 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தில் சேதம் அடைந்த கரும்பின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story