காங்கேயத்தில் உள்ள பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று 2-ம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காங்கேயத்தில் உள்ள பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று 2-ம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 1 Sept 2021 9:47 PM IST (Updated: 1 Sept 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் உள்ள பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று 2ம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கேயம், 
காங்கேயத்தில் உள்ள பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று 2-ம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
விவசாயிகள் புகார்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் பி.ஏ.பி. பாசனத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இதில் 4 மண்டலங்களாக பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரில், வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்கவேண்டிய அளவைவிட, குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போதும் 7 நாள் அடைப்பு, 7 நாள் திறப்பு எனும் நிலையில் 9 சுற்றுக்கள் வழங்கவேண்டிய நிலையில் இருந்து படிப்படியாக தண்ணீர் வழங்கும் நாள்களைக் குறைத்து விட்டனர்.மேலும் தற்போது தண்ணீர் 3 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.மேலும் 4.5 அடி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் 4.2 அடி தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
விவசாயிகள் போராாட்டம்
இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கேயத்தில் திருப்பூர் சாலையில் உள்ள பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், உடுமலை பி.ஏ.பி செயற்பொறியாளர் கோபி மற்றும் காங்கேயம் பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு ஆகியோரை பி.ஏ.பி விவசாயிகள் சிறைபிடித்துப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை கைவிட்டனர்
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் 2-ம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொள்ளாச்சி கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி கலந்துகொண்டு விவசாயிகளிடம் பேசினார்.
 அப்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது வழங்கி வரும் தண்ணீரின் அளவை 4.2-ல் இருந்து உயர்த்தி 4.4 அடி தண்ணீர் வழங்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து போராட்டம் நடத்திய விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story