தர்மபுரி மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 244 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 874 ஆகும்.
Related Tags :
Next Story