கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்ட காதலன்


கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்ட காதலன்
x
தினத்தந்தி 1 Sep 2021 4:48 PM GMT (Updated: 2021-09-01T22:18:37+05:30)

கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்ட காதலன் கைது செய்யப்பட்டார்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டி அருகே உள்ள ரெட்டைப்பாறையை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மகன் சதீஷ் (வயது 20). இவர், திண்டுக்கல் அருகே உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படிக்கிற மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர்.

 இதனையடுத்து தன்னுடைய ஆபாச படங்களை, தனது காதலன் சதீசுக்கு செல்போன் மூலம் அந்த மாணவி அனுப்பி உள்ளார். இந்தநிலையில் இவர்களுக்கிடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், மாணவியின் ஆபாச படங்களை தூத்துக்குடியை சேர்ந்த அருணுக்கு அனுப்பினார். அருண் தனது நண்பர்களான விஷ்வா, நெல்சன் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். அதனை, முகநூலில் அவர்கள் பதிவிட்டனர். 

இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் புகார் கூறப்பட்ட சதீஷ், அருண், விஸ்வா, நெல்சன் ஆகிய 4 ேபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். 

இதில் சதீஷ், நெல்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நிலக்கோடடை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரும், நீதிமன்ற காவலில் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story