பெண் உள்பட 2 பேர் கைது


பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Sep 2021 5:44 PM GMT (Updated: 2021-09-01T23:14:59+05:30)

வாலிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மானாமதுரை,
மேலூர் அருகே கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ராமச் சந்திரன் (வயது33). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ஊருக்கு திரும்பிய அவர், நேற்று முன்தினம் மானாமதுரையில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்தார். அப்போது அறை கதவை மானாமதுரையை சேர்ந்த பாலசுப்ரமணியன், சுதா ஆகியோர் தட்டினர். கதவை திறந்த ராமச்சந்திரனை பாலசுப்ரமணியன் கத்தியால் குத்திய தாக கூறப்படுகிறது. பிறகு அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்ரமணியன், சுதா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story