கணவனை கொலை செய்த மனைவி கைது
கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை அடுத்த குட்டி தின்னி கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது45) இவரது மனைவி விஜயராணி (40). ராஜாங்கம் தினசரி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். நேற்று இரவு வழக்கம் போல அவர் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயராணி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், ராஜ்கமல் ஆகியோர் விசாரணை நடத்தி விஜயராணியை கைது செய்து வழக்குபதிவு செய்தனர்.
Related Tags :
Next Story