கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.


கோட்டாட்சியர் அலுவலகத்தில்  தீக்குளிக்க முயன்ற பெண்.
x
தினத்தந்தி 1 Sept 2021 11:50 PM IST (Updated: 1 Sept 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

வாணியம்பாடி

வாணியம்பாடி- நியூடவுனில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனைவி சாந்தம்மாள் என்பவர், தனது சொத்தினை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற சாந்தம்மாளை தடுத்து விசாரணை செய்தனர்.
 
அப்போது கலந்திரா பகுதியை சேர்ந்த கண்ணபிரான் என்பவர் என்னை தூண்டியதால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக சாந்தம்மாள் கூறினார். அதனை தொடர்ந்து கண்ணபிரான் மீது வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கண்ணபிரானை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story