கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் திறப்பு
4 மாதங்களுக்கு பிறகு கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் திறக்கப்பட்டது.
வேதாரண்யம்:
4 மாதங்களுக்கு பிறகு கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் திறக்கப்பட்டது.
வனவிலங்கு சரணாலயம் திறப்பு
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான் மற்றும் வெளிமான், குதிரை, நரி, முயல், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொேரானா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வனவிலங்கு சரணாலயம் மூடப்பட்டது. இந்தநிலையில் 1-ந்தேதி முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் திறக்கப்பட்டது.
முக கவசம் கட்டாயம்
இதுகுறித்து கோடியக்கரை வன சரக அலுவலர் அயூப்கான் கூறியதாவது:-
ேகாடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். அணியாத சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. சுற்றுலா பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்ட பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
சுற்றுலா பயணிகள் தாங்கள் அணியும் முக கவசங்களை சாலை ஓரங்களிலோ, சரணாலய பகுதிகளிலோ வீசி எறிய கூடாது. அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடித்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றாார்.
Related Tags :
Next Story