திருப்பத்தூருக்கு 850 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
850 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
வேலூர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் தேர்தலுக்கு வாக்குச்சீட்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.
முதற்கட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 850 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 350 கட்டுப்பாட்டு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story