பர்னிச்சர் கடையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திருட்டு


பர்னிச்சர் கடையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 2 Sept 2021 12:35 AM IST (Updated: 2 Sept 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஜன்னல் கம்பியை உடைத்து பர்னிச்சர் கடையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திருட்டு

கரூர்,
கரூர் கவுரிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் கோவை ரோட்டில் டி.வி. மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு மணிகண்டன் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றபோது கடையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கல்லா பெட்டிக்கு சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன்  இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story