வீட்டில் நகை- பணம் திருடிய 2 பேர் கைது


வீட்டில் நகை- பணம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 12:59 AM IST (Updated: 2 Sept 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே உள்ள நாராயணநகர் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் பக்கில். இவரது வீட்டில் முத்துக்குமார் (வயது 27) என்பவர் வாடகைக்கு இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் இந்த திருட்டில் ஈடுபட்டது நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்த காளிராஜா (21), சங்கர்நகர் வடக்கு சிதம்பரநகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 பவுன் நகைகளை மீட்டனர். 

Related Tags :
Next Story