சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 60). இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது பேத்தி ஸ்ரீநிதியுடன்(11) அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு டிபன் வாங்க சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் 2 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காயம் அடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்த போது வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ஸ்ரீநிதி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.