வேட்டையாட முயன்ற 13 பேர் கைது


வேட்டையாட முயன்ற 13 பேர் கைது
x
தினத்தந்தி 1 Sep 2021 8:11 PM GMT (Updated: 2021-09-02T01:41:37+05:30)

கடையம் அருகே வேட்டையாட முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையம்:
கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வெய்காலிப்பட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நாய்களை கொண்டு இளைஞர்கள் சிலர் வேட்டைக்கு சென்றனர். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை வட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்பேரில், வேட்டையாட முயன்ற 13 பேரை கைது செய்தனர். இதில் 7 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், 6 பேருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் என ரூ.2.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தப்பி சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Next Story