மருமகன் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு


மருமகன் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Sept 2021 1:58 AM IST (Updated: 2 Sept 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே மருமகன் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

காரியாபட்டி,

திருச்சுழி அருகே மேலகள்ளக்காரியை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 30). இவர் கீழக் கள்ளக்காரியை சேர்ந்த பொன்னையா மகள் ராமலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இருவரையும் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் ராமலட்சுமியின் தம்பி முருகன், அவரது பெற்றோர் பொன்னையா, முனியம்மாள், பொன்னையாவின் மருமகன் நாகநாதன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அழகுபாண்டியை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பரளச்சி போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story