மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளிப்பு


மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளிப்பு
x

மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளித்தார்

தா.பழூர்
 தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). மாட்டுவண்டி தொழிலாளி. இப்பகுதியில் மணல் குவாரி அமைக்க இப்பகுதி மாட்டுவண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஜெயங்கொண்டத்தில் நேற்று சாலை மறியல் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாஸ்கர், மாலை வீடு திரும்பினார். ஏற்கனவே சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில் அவரது மாட்டு வண்டி தா.பழூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் பாஸ்கர் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாஸ்கர் தீக்குளித்த சம்பவம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story