சேற்றில் சிக்கிய லாரி


சேற்றில் சிக்கிய லாரி
x
தினத்தந்தி 2 Sept 2021 6:30 AM IST (Updated: 2 Sept 2021 6:30 AM IST)
t-max-icont-min-icon

சேற்றில் சிக்கிய லாரி

பந்தலூர்

கேரள மாநிலம் நிலம்பூரில் இருந்து பந்தலூர் அருகே உள்ள குந்தலாடிக்கு கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. பொன்னானியில் மேடான சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது திடீரென சாலையோர சேற்றில் சிக்கியது. 

இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னர் அந்த வழியே போக்குவரத்து சீரானது.

Next Story