ஓசூரில் கடன் தொல்லையால் நாக்கை அறுத்துக்கொண்ட கட்டிட மேஸ்திரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


ஓசூரில் கடன் தொல்லையால் நாக்கை அறுத்துக்கொண்ட கட்டிட மேஸ்திரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 2 Sept 2021 6:30 AM IST (Updated: 2 Sept 2021 6:30 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் கடன் தொல்லையால் கட்டிட மேஸ்திரி நாக்கை அறுத்துக் கொண்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஓசூர்:
 ஓசூரில் கடன் தொல்லையால் கட்டிட மேஸ்திரி நாக்கை அறுத்துக் கொண்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கட்டிட மேஸ்திரி
ஓசூர் வசந்த் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது47). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சவுபாக்கியா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகேசன் அந்த பகுதியில் சொந்தமாக பல லட்ச ரூபாய் செலவு செய்து புதிய வீடு கட்டி உள்ளார். வீடு கட்டுவதற்காக வங்கியில் பெற்ற கடனை அடைப்பதற்கு முருகேசன் பலரிடம் தொடர்ந்து கடன் வாங்கி உள்ளார்.
ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகமானதால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு அவரை தொந்தரவு செய்தனர். இதனால் மனவேதனை அடைந்த முருகேசன் நேற்று வீட்டில் தனது நாக்கை தானே அறுத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். 
தீவிர சிகிச்சை
அவருடைய சத்தம் கேட்டு குடும்பத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக கட்டிட மேஸ்திரி நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story