இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, மணமகனுக்கு முகநூலில் அனுப்பிய வாலிபர் கைது
ஓசூரில் இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, மணமகனுக்கு முகநூலில் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
பேரிகை அருகே பி.முதுகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (25), இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து வேறு ஒரு வாலிபருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், அந்த இளம்பெண்ணின் நிச்சயதார்த்த போட்டோவை ஆபாசமாக சித்தரித்த அதனை மாப்பிள்ளையின முகநூலுக்கு அனுப்பிவைத்தார். இது பெண்ணின் உறவினர் கேட்டபோது, அவரை, நரேஷ்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து நரேஷ்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story