திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் பள்ளிகளை திறக்க அரசு அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் நேற்று முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மணவாள நகர் கே.இ. நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேல்நல்லாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுடன் கலந்துரையாடினார்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story