ராணுவ வீரர் விபத்தில் பலி
பணி நிமித்தமாக பஞ்சாபில் இருந்து ராஜஸ்தான் சென்ற கண்ணமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
கண்ணமங்கலம்
பணி நிமித்தமாக பஞ்சாபில் இருந்து ராஜஸ்தான் சென்ற கண்ணமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
அவில்தார்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு 4 மகன்கள்.
இதில் ஆறுமுகம் (வயது 37) என்பவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் அவில்தாராக பணி புரிந்து வந்தார். இவருக்கு அமுதா (32) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து தனது மனைவி அமுதாவுடன், ஆறுமுகம் பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் 30-ந்தேதி பஞ்சாபில் இருந்து ராஜஸ்தான் செல்வதாக ஆறுமுகம் தனது மனைவி அமுதாவிடம் சொல்லிவிட்டு ராணுவ வண்டியில் புறப்பட்டு சென்றுள்ளார்.
மேலும் குப்பம் கிராமத்தில் உள்ள தனது உறவினர்களிடமும் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பலி
நேற்று முன்தினம் ராணுவ அதிகாரிகள் குப்பம் கிராமத்தில் உள்ள தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுமுகம் விபத்தில் இறந்துவிட்டதாக போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு ஆறுமுகத்தின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த துயர செய்தி கேட்டு குப்பம் கிராமத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆறுமுகம் உடல் சொந்த ஊரான குப்பம் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அடக்கம் செய்யப்படும் என அவரது சகோதரர் முருகேசன் தெரிவித்தார்.
இறந்த ஆறுமுகத்துக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. அவர் எப்படி விபத்தில் இறந்தார்?அங்கு நடந்தது என்ன? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
Related Tags :
Next Story