உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக விதைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக விதைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போடிப்பட்டி:
உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக விதைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமராவதி, திருமூர்த்தி அணைகளை அடிப்படையாகக் கொண்டு அதிக அளவில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. அத்துடன் பருவமழையை அடிப்படையாகக் கொண்டு மானாவாரியில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர் இருப்பு முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளது. மேலும் பருவமழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதனால் சாகுபடிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் மூலம் விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு, முறையான ஆய்வுக்குப் பிறகு சான்று பெற்ற விதைகளாக விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.அவ்வாறான தரமான விதைகள் உடுமலை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவில் இருப்பு உள்ளதால் அவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
மானிய விலை
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
உடுமலை வேளாண்மை அலுவலகத்தில் கோ 51 ரக நெல் விதைகள் 18 டன் அளவிலும், ஏடிடி 45 ரக விதைகள் 2900 கிலோ அளவிலும் இருப்பு உள்ளது. இதுதவிர வம்பன் 8 ரக உளுந்து விதைகள் 2 டன் அளவிலும், கொண்டைக்கடலை விதைகள் 2,630 கிலோ அளவிலும், நிலக்கடலை விதைகள் 1080 கிலோ அளவிலும் உள்ளது.
சோளம் விதைகள் 400 கிலோ அளவிலும் மற்றும் கம்பு விதைகள் 100 கிலோ அளவிலும் இருப்பு உள்ளது. இந்த விதைகள் தேசிய உணவு அபிவிருத்தித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், விதை கிராமத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ளது.
தேவையான விவசாயிகள் உடுமலை வட்டார வேளாண்துறையினரைத் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர சிறுதானிய நுண்ணூட்டங்கள் 2300 கிலோ அளவிலும், தென்னை நுண்ணூட்டம் 3500 கிலோ, பயறு வகை நுண்ணூட்டம் 800 கிலோ, நெல் நுண்ணூட்டம் 1,750 கிலோ, கரும்பு நுண்ணூட்டம் 200 கிலோ என்ற அளவுகளில் இருப்பு உள்ளது. மேலும் நெல் அசோஸ்பைரில்லம் 200 லிட்டர், இதர வகை 120 லிட்டர், பயிர் ரைசோபியம் 50 லிட்டர், பாஸ்போபாக்டீரியா 230 லிட்டர் இருப்பு உள்ளது. இவற்றை விவசாயிகள் பெற்றுப் பயனடையலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story