இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2021 9:49 PM IST (Updated: 2 Sept 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அரசு தடை விதித்து உள்ளது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கோரி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து விநாயகர் சிலை முன்பு தேங்காய் உடைத்து விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று விநாயகர் சிலையிடம் மனு அளித்தனர். இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்துகொண்டனர். 

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு இந்து முன்னணி சார்பில் பழம்பேட்டை முக மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை  வைத்து வழிபட அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பினர்.

 ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ராஜா, சுரேஷ், அஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் முகமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, விநாயகர் சதுர்த்தி விழா அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதி வழங்க வேண்டும், எனப் பிரார்த்தனை செய்து வணங்கினர்.

கலசபாக்கம்

கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வந்தவாசி

வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் தேரடி வழித்துணை விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்து முன்னணியினர் காமாட்சியம்மன் கோவில், வழித்துணை விநாயகர் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் கோரிக்கை வழிபாடு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்ேகற்றோர் கூறுகையில், கொரோனா பரவலை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி அன்று தெருக்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுத்த தமிழக அரசு மதுபானக்கடைக்கும்,

 தியேட்டர்களுக்கும் அனுமதி அளித்திருப்பது எந்த வகையில் நியாயம்? எனக் கேள்வி எழுப்பினர். 

ஆரணி

ஆரணி நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரியாத்தம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நகர தலைவர் நாகராஜன், நகர இளைஞர் அணி தலைவர் விக்னேஷ், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் பி‌.கோபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகிகள், பா.ஜ.க. ஓ.பி.சி. அணியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story