காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட 46 ஆயிரம் லிட்டர் மதுபானம் அழிப்பு


காரைக்காலில்  பறிமுதல் செய்யப்பட்ட 46 ஆயிரம் லிட்டர் மதுபானம் அழிப்பு
x
தினத்தந்தி 2 Sept 2021 9:57 PM IST (Updated: 2 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கலால்துறையினர் அழித்தனர்.

காரைக்கால், செப்.
காரைக்காலில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கலால்துறையினர் அழித்தனர்.
மதுபானம் கடத்தல்
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு மதுபானம் கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு கடத்தி செல்லப்படும் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைக்கின்றனர்.
பின்னர் அவை கலால்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.     இதுதவிர போலி மதுபானம், சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு கலால்துறையினரால் அவ்வப்போது அழிக்கப்பட்டு வருகிறது.
46 ஆயிரம் லிட்டர் மதுபானம் அழிப்பு
இந்தநிலையில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 ஆயிரம் லிட்டர் மதுபானம் கலால்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை அழிக்க கலால்துறை அதிகாரி ஆதர்ஷ் உத்தரவிட்டார். 
அதன்பேரில் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்து வைத்திருந்த மதுபாட்டில்கள் தரையில் அடுக்கி வைக்கப்பட்டு பொக்லைன் எந்திரத்தால் ஏற்றி அழிக்கப்பட்டது. 

Next Story