இந்து முன்னணியினர் இரட்டை விநாயகரிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்
போராட்டம்
திருக்கோவிலூர்,
வருகிற 10-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் உள்ள இரட்டை விநாயகரிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமராஜன் தலைமை தாங்கினார். விஸ்வ இந்து பரிஷித் மூத்த நிர்வாகி ராமமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவரும், தொழிலதிபருமான திருக்கோவிலூர் ஆர்.கார்த்திகேயன், நிர்வாகி பத்ரிநாராயணன், நகர பொறுப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி விநாயகரிடம் மனு கொடுத்தும், விழாவுக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். அப்போது கிளை பொறுப்பாளர்கள் வெங்கடேசன், பிரகாஷ், பிச்சைக்காரன், யோகநாதன், அய்யனார், திருக்கோவிலூர் பா.ஜ.க. நிர்வாகி ராஜாஜி, மதன் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story