வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது


வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2021 4:55 PM GMT (Updated: 2021-09-02T22:25:32+05:30)

வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது.இது சம்பந்தமாக நயினார்கோவில் காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து நயினார்கோவில் போலீசார் பாண்டியூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாண்டியூரை சேர்ந்த முருகேசன் மகன் போண்டா என்கிற முத்துக்குமார் (வயது31), ஆறுமுகம் மகன் மாயா (46) ஆகியோரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து  முத்துக்குமார் என்பவரை கைது செய்தனர்.

Next Story