குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு அரங்கம்
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மூலம் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய் மார்கள், வளர் இளம் பெண்களின் நலனுக்காக திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,454 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 72,368 என கணக்கிடப்பட்டுள்ளன இதில் வயதிற்கு ஏற்ற எடை குறை வான குழந்தைகள் 5.57 சதவீதம், உயரத்திற்கு ஏற்ற எடை குறைவான குழந்தைகள் 0.47 சதவீதம் என கண்டறியப்பட்டு உள்ளது. இத்தகைய ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் குறித்து விழிப்பிணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 1 முதல் 30-ந் தேதி வரை தேசிய ஊட் டச்சத்து மாதமாக கடைப் பிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்பு ணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக மாவட்ட கலெக்டர் சந்திரகலா தேசிய ஊட்டச் சத்து மாதவிழா தொடர்பான விழிப்புணர்வு அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமட்சி கணேசன், சுகாதார துணை இயக்குனர் குமர குருபரன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி அகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story