வீடுகளில் 6 பவுன் நகை திருட்டு


வீடுகளில் 6 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 2 Sept 2021 11:06 PM IST (Updated: 2 Sept 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் 6 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி, 
காரைக்குடி புறநகர் பகுதியான மாருதி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 55). இவர் குடும்பத்துடன் திருப்பத்தூருக்கு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தனர். மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பீரோவில் இருந்த 3 பவுன் நகைகளை காணவில்லை. இதேபோல் செல்லப்பா நகரில் மணிகண்டன் (வயது45). இவரது வீட்டின் கதவு உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகையை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story