சிவகங்கை, சிங்கம்புணரியில் பலத்த மழை


சிவகங்கை, சிங்கம்புணரியில் பலத்த மழை
x
தினத்தந்தி 2 Sept 2021 11:09 PM IST (Updated: 2 Sept 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, சிங்கம்புணரியில் பலத்த மழை பெய்தது.

சிவகங்கை, 
சிவகங்கை நகரில் நேற்று இரவு 7 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் மழை நீடித்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சிவகங்கை காந்தி வீதி மற்றும் புதுத்தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் சாக்கடையில் உள்ள கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் ஓடியது. இந்த மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. சிங்கம்புணரி பகுதியிலும் மழைபெய்தது. மருதி பட்டி அருகே 50 ஆண்டுகால மரம் சாய்ந்தது. உடனே நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story