கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு


கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு
x

வாணியம்பாடி பகுதியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் வணிகம், தொழில் நிறுவனங்கள், கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்படும், 
என எச்சரிக்கை விடுத்திருந்தார். 

கிராமம், நகரங்களில் மக்களை தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதேபோல் வாணியம்பாடியை அடுத்த நேதாஜநகர் பகுதியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் மக்களை தேடி வீட்டுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. 

அந்தப் பணியை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story