வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் தர்ணா
அரசு கலைக்கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
கரூர் அரசு கலைக்கல்லூரி புவி அமைப்பியல் துறை சார்பில் மாணவர்களை களப்பயணத்திற்கு அழைத்து செல்லும் பணத்திற்கு துறைத்தலைவர் கணக்கு காட்டுவதில்லை என்றும், மாணவர்கள் பணத்தை ஊழல் செய்துள்ளதாகவும், மாணவர்களிடம் அவர் கடுமையாக நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புவி அமைப்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் துறைத்தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டதையடுத்து மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story