டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பஸ் மறியல்
அரிமளத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிமளம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் போன்றவை செயல்படும் அரிமளத்தின் மையப்பகுதியில் இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
ஆகவே, இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், கம்யூனிஸ்டு மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று பஸ் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story