கேட்பாரற்று நின்ற சொகுசு காரில் ரூ.11 லட்சம் சிக்கியது
திருச்சியில் கேட்பாரற்று நின்ற சொகுசு காரில் ரூ.11 லட்சம் சிக்கியது. அதை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கே.கே.நகர், செப்.3-
திருச்சியில் கேட்பாரற்று நின்ற சொகுசு காரில் ரூ.11 லட்சம் சிக்கியது. அதை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரிசி குடோன் அருகே நின்ற கார்
திருச்சி கே.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடந்த 31-ந் தேதி இரவு 11.15 மணிக்கு, இ.வி.ஆர். சாலையில் உள்ள அரிசி குடோன் அருகே ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு சாலையோரம் சொகுசுகார் ஒன்று கேட்பாரற்று நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது. அதை போலீசாரும், அதன் உரிமையாளர்கள் யாரேனும் வருகிறார்களா? என கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் வரவில்லை.
ரூ.11 லட்சம் சிக்கியது
அந்த கார், கேரள மாநில பதிவு எண் கொண்டது. (வண்டி எண்: கே.எல். 07/பி.இசட் 1888). பின்னர், போலீசார் அந்தக் காரை சோதனையிட்டனர். அப்போது கார் இருக்கையில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் பணக்கட்டுகள் கிடந்தன. அதில் ரூ.11 லட்சம் இருந்தன.
இதையடுத்து போலீசார் காரையும், பணத்தையும் கைப்பற்றி கே.கே. நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் கேட்பாரற்று நின்ற கார் மற்றும் பணம் யாருடையது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத செயலுக்கு பணத்துடன் வந்தவர்கள், சூழ்நிலை சரியில்லாததால் ஓட்டம் பிடித்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story