ஆசிரியர் பயிற்சி மாணவ- மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு


ஆசிரியர் பயிற்சி மாணவ- மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு
x
தினத்தந்தி 2 Sep 2021 7:42 PM GMT (Updated: 2 Sep 2021 7:42 PM GMT)

ஆசிரியர் பயிற்சி மாணவ- மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான இந்திய கல்வி முறை என்ற பாடத்திற்கான தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த தேர்வினை எழுத 65 மாணவிகளும், 6 மாணவர்களும் என மொத்தம் 71 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வினை 54 பேர் எழுதினர். 4 மாணவர்களும், 13 மாணவிகளும் என மொத்தம் 17 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது.
தேர்வினை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் மாரிமீனாள், முதன்மை கண்காணிப்பாளர் சாதிக் பாஷா மற்றும் துறை அலுவலர் ஸ்ரீரங்கன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதலாமாண்டு மாணவ- மாணவிகளுக்கு கற்கும் குழந்தை பாடத்திற்கான தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 75 பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வருகிற 21-ந்தேதி வரையும், முதலாமாண்டு ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வருகிற 22-ந் தேதி வரையும் தேர்வு நடக்கிறது.

Next Story