பெண்ணுக்கு வீட்டில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்


பெண்ணுக்கு வீட்டில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்
x
தினத்தந்தி 3 Sept 2021 1:18 AM IST (Updated: 3 Sept 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பெண்ணுக்கு, பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கல்லை கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு அவசர அழைப்பு வந்தது. உடனடியாக குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் கல்லை கிராமத்திற்கு சென்றது. அங்கு மிகுந்த பிரசவ வலியுடன் இருந்த சுப்பிரமணியனின் மனைவி ரேவதிக்கு (வயது 30), அவசர நிலை உணர்ந்து வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் ரேவதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர்.ஆம்புலன்சில் விரைந்து வந்து பிரசவம் பார்த்த அவசர கால மருத்துவ நுட்புனர் சுகன்யா மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர் ஆகியோருக்கு, சுப்பிரமணியன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். சுப்பிரமணியன்- ரேவதி தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story