வாலிபரை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு


வாலிபரை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Sept 2021 1:18 AM IST (Updated: 3 Sept 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமம் ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் பிரவீன்காந்தி(வயது 26). இவருக்கும், இவரது சித்தப்பாவான ராமநாதன் என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் ராமநாதன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீன்காந்தி ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள செல்போன் கடை ஒன்றில் தனது செல்போனுக்கு கவர் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமநாதன், பிரவீன்காந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராமநாதன் அருகில் இருந்த மண்வெட்டி கழியால் பிரவீன்காந்தியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் காயமடைந்த பிரவீன்காந்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இது குறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராமநாதன் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Next Story