மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டம்
முனைஞ்சிப்பட்டியில் மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு தொடங்கியது. இதற்கிடையே கொரோனா காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் வழங்கவில்லை என்று கூறி, 9 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வை புறக்கணித்து, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மற்ற மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
Related Tags :
Next Story