விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கோரி, நெல்லையில் இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர் நூதன போராட்டம்


விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கோரி, நெல்லையில் இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2021 1:58 AM IST (Updated: 3 Sept 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கோரி, நெல்லையில் இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினா.

நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கோரி, இந்து முன்னணி, பா.ஜனதா சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி

வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி அளிக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவிலில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கோவில் முன்பு விநாயகர் துதி பாடல்களை பாடி, நூதன போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து குற்றாலநாதன் கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பதை ரத்து செய்ய வேண்டும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி வக்கீல் அணி பாலாஜி கிருஷ்ணசாமி, மண்டல தலைவர் ஆனந்தராஜ் மற்றும் இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் நெல்லையில் உள்ள பல்வேறு கோவில்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது.

திசையன்விளை- வள்ளியூர்

இந்து முன்னணி சார்பில் திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேண்டுதல் பிராத்தனை நடந்தது. மாவட்ட செயலாளர் விக்னேஷ், ஒன்றிய தலைவர் கணேசமூர்த்தி, செயலாளர் சுப்பையா, நகர பொருளாளர் செந்தில், செயலாளர் அய்யப்பன், ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் முருகன் கோவில் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நெல்லை மாவட்ட தலைவர் தங்கமனோகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் பரமசிவன், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், பூவேந்தன், மோகன்தாஸ், பா.ஜ.க வள்ளியூர் நகரத்தலைவர் சிவராமகுட்டி, பொருளாளர் பழனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிராஞ்சேரி- அம்பை

சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாவட்ட மகளிரணி தலைவர் செல்வகனி, ஒன்றிய பொது செயலாளர் ராஜவேலு, சிவபாலன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராமநாதன், நகரசெயலாளர்கள் கோபாலசமுத்திரம் மாரியப்பன், பத்தமடை சுப்பிரமணியன், கொம்பையா, பொன்ராஜ் உள்பட திரளான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
அம்பை பூக்கடை பஜார் உச்சிமாகாளி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், நகர தலைவர் ஸ்ரீதர் சரவணன், செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு, இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் வைகுண்டராஜா, சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story