வயல்வெளியில் சுற்றி திரிந்த மான் குட்டி மீட்பு


வயல்வெளியில் சுற்றி திரிந்த மான் குட்டி மீட்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 8:47 PM GMT (Updated: 2021-09-03T02:17:42+05:30)

ஆலங்குளத்தல் வயல்வெளியில் சுற்றி திரிந்த மான் குட்டி மீட்கப்பட்டது.

ஆலங்குளம்:
ஆலங்குளம்- தென்காசி மெயின் ரோடு சாலையோர வயல்வெளியில் நேற்று காலையில் மான்குட்டி ஒன்று வழிதவறி சுற்றி திரிந்து சோர்வான நிலையில் நடக்க முடியாமல் தவித்தது. இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் பசுமை இயக்க தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த மான்குட்டியை மீட்டு தீயணைப்பு நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த மான் குட்டிக்கு தண்ணீர், உணவு வழங்கினர். பின்னர் அதனை வனத்துறையினர் மூலம் வனப்பகுதியில் விட்டனர்.

Next Story