மின்சாரம் தாக்கி சிறுத்தை சாவு- வனத்துறையினர் விசாரணை


மின்சாரம் தாக்கி சிறுத்தை சாவு- வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 2 Sep 2021 9:01 PM GMT (Updated: 2021-09-03T02:31:59+05:30)

குற்றாலம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை இறந்தது.

தென்காசி:
தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் சாமி என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள மின்கம்பத்தின் அருகில் நேற்று காலை ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாபநாசம் வனச்சரகர் பரத் உத்தரவின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது தோப்பில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் சிறுத்தை மீது பாய்ந்து அது இறந்திருப்பது தெரியவந்தது. சிறுத்தையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story