கேரள ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை


கேரள ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 3 Sep 2021 12:50 AM GMT (Updated: 2021-09-03T06:20:42+05:30)

கேரள ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை

பந்தலூர்

தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் தாலுகா உள்ளது. இங்குள்ள பள்ளிகளில் கேரளாவில் வசிக்கும் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தாலுகா பகுதியிலேயே தங்கி பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் ஆசிரியர்கள் கேரளாவுக்கு சென்று திரும்புகின்றனர். 

இதனால் மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.இந்த நிலையில் நேற்று தாளூர் சோதனைச்சாவடியில் பந்தலூர் தாசில்தார் குப்புராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக  அலுவலர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 

அப்போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வந்த கேரள ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவர்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Next Story