மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் ‘சென்னை பெற்ற வல்லமை’ தலைப்பில் போட்டி


மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் ‘சென்னை பெற்ற வல்லமை’ தலைப்பில் போட்டி
x
தினத்தந்தி 3 Sept 2021 12:08 PM IST (Updated: 3 Sept 2021 12:08 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ‘சென்னை பெற்ற வல்லமை’ என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டி கடந்த மாதம் 22-ந்தேதி ஆன்-லைனில் நடந்தது.

இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த ஆர்.சபரிஷ், கே.பிரித்திகா, சுஷில் ஸ்ரீதரன் ஆகியோருக்கும், 8 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, டி.அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story