திருப்பூரில் குண்டும்-குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி


திருப்பூரில் குண்டும்-குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 3 Sep 2021 3:46 PM GMT (Updated: 2021-09-03T21:16:22+05:30)

திருப்பூரில் குண்டும்குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்,
திருப்பூரில் குண்டும்-குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். 
குண்டும்-குழியுமான சாலை 
திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதுபோல் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மாநகரில் உள்ள சாலைகளிலும் பல இடங்களிலும் குண்டும்-குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். 
அதன்படி தற்போது மாநகரில் மழை பெய்து வருவதால் இந்த குழிகளில் மழைநீரும் தேங்கி நிற்கிறது. பெருமாள் கோவில் வீதியில்.கலெக்டர் அலுவலக வளாகத்திலும்  மழைநீர் பள்ளத்தில் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
வாகன ஓட்டிகள் 
இதுபோல் தென்னம்பாளையம் சந்தை பகுதியிலும் பல இடங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது. ஊத்துக்குளி ரோடு இரட்டை கண் பாலப்பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்கி வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரம் பகுதியில் பல இடங்களில் பல்வேறு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாலும், ஆபத்தான முறையிலும் இருந்து வருகின்றன. பலர் கொங்கு மெயின்ரோட்டை பயன்படுத்தி வருவதால் சேறும், சகதியுமாக அந்த பகுதி காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் பலர் சறுக்கி விபத்திலும் சிக்கி வருகிறார்கள்.

Next Story