வேடசந்தூர் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை


வேடசந்தூர் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Sept 2021 9:20 PM IST (Updated: 3 Sept 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் அருணாசலம் (வயது 24). இவர் கோவிலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். 
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது அருணாசலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மின்வாரிய ஊழியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணாசலம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story