வேன் கவிழ்ந்து விபத்து


வேன் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 3 Sept 2021 9:26 PM IST (Updated: 3 Sept 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

வேன் கவிழ்ந்து விபத்து

பொங்கலூர்
பொங்கலூர் அய்யப்பா நகரை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பிரசாந்த் (வயது 35). இவரது மகன்கள் செல்வகணபதி (11), செல்வகுமார் (4). இவர்களுடன் மாதப்பூர் பாண்டிராஜ் என்பவரது மகன் லோகேஷ் (22). இவர்கள் 4 பேரும் வேனில் பல்லடம் சென்றுவிட்டு, பின்னர் பொங்கலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் பி.ஏ.பி பயணியர் விடுதி அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த வேன் திடீரென இவர்கள்  வந்த வேன் மீது மோதியது. இதில் வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். உடனடியாக 4 பேரையும் பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story